திங்கள், 9 ஜனவரி, 2012

எழ வேண்டும்


“அய்யப்பானுசொன்ன வாயி
ஐயோ,அப்பா சொல்லுது
அடி வாங்கிய பின்னாலும்
அறிவுவர மறுக்குது

சரணகோஷ  வாயினிலே
மரண ஓலம்கேட்குது
மணிகண்ட பிரபுகாதோ
செவிடாகி கிடக்குது

மகர ஜோதிமாய்மாலம்
மடையர் நெஞ்சம் மறுக்குது
மண்டை உடைந்த பின்னாலும்
மனம்திருந்த மறுக்குது

இத்து போகும்வாழ்வு என்றே
விவசாயி போறாடுரான்
இருமுடியைஇறக்கி வைக்க
இவன் வழிய தேடுறான்

மானபங்கம் படுத்துறான்
மாறி,மாறி துப்புறான்
அவமானம் நடந்த பின்னும்
ய்யபனை தேடுறான்

அவனும் தமிழன் இவனும் தமிழன்
அகிலம் பார்த்து சிரிக்குது
பக்தி வந்தால் புத்தி போகும்
பகுத்தறிவு பகலவன் சொன்னது
பளிச்சுன்னுஉண்மை உறைக்குது

படமெடுத்து காட்டுறான்
பயந்துருவோம்னு நினைக்கிறான்
விட்டு கொடுத்த இட்த்தில் நின்னு
சுட்டுபுடுவோம்னு மிரட்டுறான்

உச்ச நீதிமன்றம்முழிக்குது
உடைஞ்ச  சிலையாய் நிக்குது

கடை அடைப்பு த்திக் காட்டி
காவி கூட்டம்சிரிக்குது
இந்திய தேசியத்தைகிழிச்சவரு
இப்ப அங்கமுதல்வரு
உண்ணாநிலைகடைபிடிச்சு
உசுப்புறாரு – “தோழரு
கண்டும் காணாம இருப்பவருக்கு
பேர் இப்ப – “பிரதமரு

கர்நாடகாவில் உதைக்கிறான்
காவிரி நீர் தர மறுக்கிறான்
கடல்ல போய் மீன் பிடிச்சா
கழுத்துல சுருக்கிட்டு இறுக்குறான்

ஏழு கோடிதமிழனும்
இன்னைக்கு ஒன்னா சேரனும்
ஒண்ணு சேந்து எழுந்து நின்னா
எதிரிஎவன்னு தேடனும்

நீதிமன்ற தீர்ப்புகளை
நிறைவேத்த முடியல
சட்டம் சந்தி சிரிக்குது

சண்டித்தன தீர்மாணங்கள்கேரள
சட்டமன்றத்தில் நிறைவேறுது
உச்ச நீதி மன்ற தீர்ப்புகள்
இந்தியாவுக்குள் செல்லுமா?
இந்தியாவுக்குள் கேரளா
இருக்குதா இல்லையா?

அதிகார வர்கமே உடனே
ஒண்ணா கூடுங்க
அணையின் நீர் மட்டம்
உசத்தலேன்னா
“356 அறிவிங்க

இடைத் தேர்தலில் வெற்றிபெற
இடக்குமடக்கு பன்னுறான்
இதுக்கு மேல அணை தாங்காதுன்னு
பொய்யைதினம் பரப்புறான்

பொறியாளர்   ஆய்வறிக்கை
புதைகுழிக்குள் போகுது
பொறுமையாக மத்திய அரசு
வேடிக்கைதான் பார்க்குது

ஈழமக்கள் விடுதலைக் காயம்
இன்னும் நெஞ்சில் ஆறல
அதுக்குள்ளே இன்னோர் துரோகம்
ஐயோ நெஞ்சம் தாங்கல!

மொழிகொடுத்து
நிலம்கொடுத்து
கனிகொடுத்து
காய்கொடுத்து
வளம்கொடுத்த
தமிழனத்தின்
நீர் உரிமையை மறுக்கிறான்
நீசத்தனம் புரிகிறான்


ஒன்று பட்ட மாநிலங்களை
உடைக்க போவதுதண்ணியா”?
தியாகம் செய்த வீர மறவர்களின்
பாடி வீடுஇந்தியா
சுய நலத்தால்டைச்ச பேரு
உனக்கு வேண்டாம் சோனியா

மனுசப்பய நடக்கத் டையா
பெரியார்பாஞ்சு வந்தாரு
          (வைக்கம் போனாரு)
பெரியாறு பாஞ்சு ஓடி வர
எவர் உதவி செய்வாரு!

சாதி மறந்து கட்சி துறந்து
தமிழர் படை கிளம்புது
தடுப்பணையை உடைப்பேன்பவனின்
இடுப்பெலும்பைத் தேடுது

எல்லை தாண்டிய மனித நேயத்தின்
சின்னமடா பெரியாறு அணைஇது
பென்னிகுயிக்எனும் பெருமனிதன்
தமிழனுக்குத் தந்த பெருங்கொடை


ஒருமைப்பாட்டின்சின்னமாக
பெரியாறு அணை திகழ வேண்டும்
பெரியார் அணையை உடைச்சான்னா
பிரபாகரனாய்நாம் எழ வேண்டும்.

1 கருத்து: