“அய்யப்பானு” சொன்ன வாயி
ஐயோ,அப்பா சொல்லுது
அடி வாங்கிய பின்னாலும்
“அறிவு” வர மறுக்குது
“சரண” கோஷ வாயினிலே
“மரண ஓலம்” கேட்குது
“மணிகண்ட பிரபு” காதோ
செவிடாகி கிடக்குது
“மகர ஜோதி” மாய்மாலம்
மடையர் நெஞ்சம் மறுக்குது
மண்டை உடைந்த பின்னாலும்
“மனம்” திருந்த மறுக்குது
“இத்து போகும்” வாழ்வு என்றே
விவசாயி போறாடுரான்
“இருமுடியை” இறக்கி வைக்க
இவன் வழிய தேடுறான்
மானபங்கம் படுத்துறான்
மாறி,மாறி துப்புறான்
அவமானம் நடந்த பின்னும்
அய்யபனை தேடுறான்
அவனும் தமிழன் இவனும் தமிழன்
அகிலம் பார்த்து சிரிக்குது
“பக்தி வந்தால் புத்தி போகும்”
பகுத்தறிவு பகலவன் சொன்னது
“பளிச்சுன்னு” உண்மை உறைக்குது
படமெடுத்து காட்டுறான்
பயந்துருவோம்னு நினைக்கிறான்
விட்டு கொடுத்த இட்த்தில் நின்னு
சுட்டுபுடுவோம்னு மிரட்டுறான்
“உச்ச நீதிமன்றம்” முழிக்குது
உடைஞ்ச சிலையாய் நிக்குது
கடை அடைப்பு நடத்திக் காட்டி
“காவி கூட்டம்” சிரிக்குது
“இந்திய தேசியத்தை” கிழிச்சவரு
இப்ப அங்க “முதல்வரு”
“உண்ணாநிலை” கடைபிடிச்சு
உசுப்புறாரு – “தோழரு”
கண்டும் காணாம இருப்பவருக்கு
பேர் இப்ப – “பிரதமரு”
கர்நாடகாவில் உதைக்கிறான்
காவிரி நீர் தர மறுக்கிறான்
கடல்ல போய் மீன் பிடிச்சா
கழுத்துல சுருக்கிட்டு இறுக்குறான்
“ஏழு கோடி” தமிழனும்
இன்னைக்கு ஒன்னா சேரனும்
ஒண்ணு சேந்து எழுந்து நின்னா
“எதிரி” எவன்னு தேடனும்
நீதிமன்ற தீர்ப்புகளை
நிறைவேத்த முடியல
சட்டம் சந்தி சிரிக்குது
சண்டித்தன தீர்மாணங்கள் – கேரள
சட்டமன்றத்தில் நிறைவேறுது
“உச்ச நீதி மன்ற தீர்ப்புகள்”
இந்தியாவுக்குள் செல்லுமா?
இந்தியாவுக்குள் கேரளா
இருக்குதா இல்லையா?
அதிகார வர்கமே உடனே
ஒண்ணா கூடுங்க
அணையின் நீர் மட்டம்
உசத்தலேன்னா
“356 ஐ” அறிவிங்க
இடைத் தேர்தலில் வெற்றிபெற
இடக்கு – மடக்கு பன்னுறான்
இதுக்கு மேல அணை தாங்காதுன்னு
“பொய்யை” தினம் பரப்புறான்
பொறியாளர் ஆய்வறிக்கை
புதைகுழிக்குள் போகுது
பொறுமையாக மத்திய அரசு
“வேடிக்கை” தான் பார்க்குது
“ஈழமக்கள் விடுதலைக் காயம்
இன்னும் நெஞ்சில் ஆறல
அதுக்குள்ளே இன்னோர் துரோகம்
ஐயோ நெஞ்சம் தாங்கல!
“மொழி” கொடுத்து
“நிலம்” கொடுத்து
“கனி” கொடுத்து
“காய்” கொடுத்து
“வளம்” கொடுத்த
தமிழனத்தின்
நீர் உரிமையை மறுக்கிறான்
நீசத்தனம் புரிகிறான்
ஒன்று பட்ட மாநிலங்களை
உடைக்க போவது “தண்ணியா”?
தியாகம் செய்த வீர மறவர்களின்
பாடி வீடு “இந்தியா”
“சுய நலத்தால்” உடைச்ச பேரு
உனக்கு வேண்டாம் சோனியா
மனுசப்பய நடக்கத் தடையா
“பெரியார்” பாஞ்சு வந்தாரு
(வைக்கம் போனாரு)
பெரியாறு பாஞ்சு ஓடி வர
எவர் உதவி செய்வாரு!
சாதி மறந்து கட்சி துறந்து
தமிழர் படை கிளம்புது
தடுப்பணையை உடைப்பேன்பவனின்
இடுப்பெலும்பைத் தேடுது
எல்லை தாண்டிய மனித நேயத்தின்
சின்னமடா பெரியாறு அணை – இது
“பென்னிகுயிக்” எனும் பெருமனிதன்
தமிழனுக்குத் தந்த பெருங்கொடை
“ஒருமைப்பாட்டின்” சின்னமாக
பெரியாறு அணை திகழ வேண்டும்
பெரியார் அணையை உடைச்சான்னா
“பிரபாகரனாய்” நாம் எழ வேண்டும்.
அருமையான கொதிக்கும் கவிதை.
பதிலளிநீக்கு